உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகள் கர்ப்பம் தந்தை கைது

மகள் கர்ப்பம் தந்தை கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் மாவட்டத்தை சேர்ந்த 53 வயது கூலித் தொழிலாளிக்கு, மனைவி மற்றும் 15 வயதில் மகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக சிறுமி வயிறு வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார். அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தந்தையே தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி