உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருப்போரூரில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணியரின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கடந்த ஓராண்டாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் மூடி வைத்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை, பயணியர் பயன்படுத்தும் வகையில், மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி