| ADDED : மே 25, 2024 12:18 AM
அச்சிறுபாக்கம்,:கடமலைப்புத்துார் ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.இந்த ஏரியிலிருந்து, சிறிய மதகு வழியாக, பாசன நீர் செல்லும் கால்வாய், தொழுப்பேடு- - ஒரத்தி நெடுஞ்சாலையை கடந்து செல்கிறது.இதில், ஏரி பாசனநீர் செல்லும் கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்ட பாலம், பராமரிப்பின்றி மண் துார்ந்து காணப்பட்டது.இதனால், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் விளைவாக, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1.5 மீட்டர் அகலத்தில், சதுர வடிவ பாலம் அமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலை துறையினர் துவக்கியுள்ளனர்.பாலம் வேலை நடைபெற உள்ளதால், தொழுப்பேடு- - ஒரத்தி நெடுஞ்சாலையில், எச்சரிக்கை பலகை அமைத்து, மாற்றுப்பாதை ஏற்படுத்தி உள்ளனர்.