உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆளவந்தார் நினைவிட குளம் ரூ.27.50 லட்சத்தில் மேம்பாடு

ஆளவந்தார் நினைவிட குளம் ரூ.27.50 லட்சத்தில் மேம்பாடு

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் என்பவரின் 1,500 ஏக்கர் நிலம், நீதிமன்ற வழக்கு விவகாரத்தைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அறக்கட்டளை வசமானது.கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட தேவைகளுக்கு, நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது, 1,054 ஏக்கருக்கு குறைந்துள்ளது. நெம்மேலியில் உள்ள அவரது நினைவிடத்தில், அவருக்கு திருவரசு கோவில் அமைக்கப்பட்டு, வழிபாடு நடக்கிறது.தற்போது, பழைய கோவிலை அகற்றி, கருங்கற்களில் புதிய கோவில் அமைக்கப்படுகிறது. இங்கு, தாமரை புஷ்கரணி குளமும் உள்ளது. அவரது அபிஷேக வழிபாட்டிற்கு, நீண்டகாலத்திற்கு முன் குளத்து நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.நாளடைவில் குளம் துார்ந்து சுருங்கியது. கோவில் புனரமைக்கப்படுவதால், 27.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இக்குளத்தையும் நிர்வாகம் புனரமைத்து மேம்படுத்துகிறது.ஏழு அடி ஆழத்திற்கு துார் வாரி, குளத்தின் நாற்புறமும் மண் சரியாமல் தடுக்க, கருங்கற்களில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. நாற்புற கரையில், கருங்கல் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி