உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிலாவட்டம் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

சிலாவட்டம் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்தாண்டு பெய்த பருவமழையின் காரணமாக, சொர்ணாவாரி பட்டத்தில், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுபாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி உள்ளிட்ட பகுதிகளில், 30,000 ஏக்கருக்கும் மேல், நெல் விவசாயம் செய்யப்பட்டது.தற்போது, கடந்த மாதத்தில் இருந்து, விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இவ்வாறு, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகளில், தரைப்பகுதியில் கற்கள் மற்றும் சவுக்கு கட்டை அமைத்து தார்பாய்களால் மூடி பாதுகாத்து வருகின்றனர்.இவ்வாறு, கடந்த மாதத்திலிருந்து சிலாவட்டத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில்,தற்போது 20 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இவற்றை, தற்போது நாள் ஒன்றுக்கு 2,000 நெல் மூட்டைகள் வீதம், லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து, தென் மாவட்டங்களில் உள்ள நெல் அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி