உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் ஏரிக்கரை நிழற்குடையில் சீர்கேடு

மதுராந்தகம் ஏரிக்கரை நிழற்குடையில் சீர்கேடு

மதுராந்தகம்:சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில், மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.இந்த நிழற்குடையில், மதுப்பிரியர்கள், மதுஅருந்தி விட்டு பகல், இரவு பாராமல் படுத்து உறங்குகின்றனர்.மேலும், உணவு பொட்டலங்கள், காலி மது பாட்டில்கள், மனிதக் கழிவு களால், பயணியர் நிழற்குடையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பேருந்துக்கு காத்திருக்கும் பெண்கள் மற்றும் வயதானவர்கள், சாலைப் பகுதியில் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், ஏரிக்கரை பயணியர் நிழற்குடையை துாய்மைப்படுத்தி, அதை சீரழிக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை