உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த மணமையைச் சேர்ந்தவர் முருகேசன், 60. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வீட்டு கழிப்பறை மின் விளக்கு ஸ்விட்ச் போட முயன்றார்.அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயர், அவரது உடலில் உரசி மின்சாரம் தாக்கியது. அலறியவாறு மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மகன் புஷ்பராஜ், மாமல்லபுரம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை