உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலை மையத்தடுப்பில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

ஜி.எஸ்.டி., சாலை மையத்தடுப்பில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

மறைமலைநகர், பிப். 26--சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், வாகன போக்குவரத்து நிறைந்தது.இந்த சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, இரும்புலியூர்- வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரம் 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரம் வரை 44.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கூடுவாஞ்சேரி -- செட்டி புண்ணியம் மகேந்திரா சிட்டி வரை 13.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என, மொத்தம் 209.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே மையத் தடுப்பில் பாதாசரிகள் கடக்க முடியாதவாறு விபத்துகளை தடுக்க, இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், திருத்தேரி - - பரனுார் வரை தடுப்பு கம்பிகள் அமைக்கப்படாமல் உள்ளதால், முதியவர்கள் பெண்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சாலை அகலப்படுத்தப்பட்ட பின், இங்கு பாதசாரிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். திருத்தேரி - பரனுார் இடையே நெடுஞ்சாலையை ஒட்டி அரசு மகளிர் விடுதி, மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தம், மொத்த விலை காய்கறி மார்க்கெட், பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் ஆபத்தை உணராமல் பல்வேறு பகுதிகளில் சாலையை கடப்பதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பகுதிகளில் தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை