உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருநாய்கள் தொல்லையால் நந்திவரம் பகுதியில் அச்சம்

தெருநாய்கள் தொல்லையால் நந்திவரம் பகுதியில் அச்சம்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம், சிறிய தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையோரம் அதிக அளவிலான தெரு நாய்கள் உலா வருகின்றன.அவை, அப்பகுதியில் குரைத்தபடி சண்டையிட்டுக் கொள்கின்றன. அப்போது சாலையில் செல்லும் மாணவ - மாணவியர்மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை கும்பலாக சேர்ந்து விரட்டுகின்றன.அதனால், சிறிய தாங்கல் ஏரிக்கரை சாலையை பயன்படுத்தி, ரயில் நிலையம், மருத்துவமனைக்கு செல்லும் முதியோர், பெண்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் அச்சத்துடன் செல்ல வேண்டியநிலை உள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சிறிய தாங்கல் ஏரிக்கரை சாலையில், தெரு நாய்களின்தொல்லை அதிகரித்து வருகிறது.அப்பகுதியில் கும்பலாக உலா வரும் தெரு நாய்கள், சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் விதமாக, குரைத்தபடி துரத்துகின்றன.எனவே, நகராட்சி நிர்வாகம் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி