மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலையில், தனியார் மருத்துவமனை எதிரே சில மாதங்களாக நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.நேற்று மதியம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிவாயு குழாய் இணைப்பில் வெட்டப்பட்டு, சத்ததுடன் வெடித்து, அருகில் இருந்த டீ கடையில் தீ பரவியது.இதன் காரணமாக, கடையின் ஒரு பகுதி முழுவும் எரிந்தது. உடனடியாக, சிறுசேரி தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சி, செங்கண்மால் பகுதியில் மத்திய அரசு அனுமதியுடன் தனியார் காஸ் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, வீடுகள் மற்றும் கடைகளுக்கு குழாய் வாயிலாக காஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, பெரு வணிக வியாபார கடைகளுக்கு காஸ் இணைப்பு வழங்கப்படுக்கிறது.அதன்படி, தீ விபத்து நடந்த இடத்திலிருந்து எதிரே உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்லும் காஸ் பைப்லைனில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கால்வாய் அமைக்கும் பணியின்போது தவறுதலாக காஸ் குழாயில் பட்டு காஸ் கசிந்தது. மேலும், வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்தது. எந்த பாதுகாப்பும், எச்சரிப்பும் இல்லாமல் காஸ் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கால்வாய் பணியும், கவனக்குறைவாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 hour(s) ago
1 hour(s) ago