உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு வரவேற்பு நிகழ்ச்சி

எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு வரவேற்பு நிகழ்ச்சி

மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஹெல்த் சயின்ஸ் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.இதில், சிறப்பு விருந்தினர்களாக, தி ஹிந்து குழுமத்தின் இயக்குனர் ராம், ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், ராம் பேசியதாவது:ஒருவர் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்க கற்றல் அவசியம். திறன்கள் தொடர்ந்து மேம்பட வேண்டும். எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பல்வேறு மாணவர்களை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மிகவும் வலுவான நுழைவுத்தேர்வு முறையை கொண்டுள்ளது.இந்த நுழைவுத்தேர்வானது, இந்திய பள்ளிக் கல்வியில் உள்ள அனைத்து பிரிவுகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளதால், இது ஒரு சிறந்த தேர்வு என கூறலாம்.மாணவர்கள், தங்களின் பெற்றோர்களின் முக்கிய பங்கினை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு, உங்கள் உதவி தேவைப்படும் போது, நீங்கள் அவர்களை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர் சத்தியநாராயணன், இணை துணைவேந்தர் ரவிக்குமார், எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கூடுதல் பதிவாளர் மைதிலி, மருத்துவ கல்லுாரி முதல்வர் நிதின் எம்.நகர்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி