மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
9 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
9 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
9 hour(s) ago
சென்னை : ஷெனாய் நகரில், 8 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கான இலவச 'பாக்சிங்' பயிற்சி, ஜூலை 1ம் தேதி முதல் துவங்குகிறது.தமிழ்நாடு பாக்சிங் சங்கத்தின் பதிவு பெற்ற, சுவாமி விவேகானந்தா பாக்சிங் கிளப் சார்பில், ஆண்டுதோறும் இலவச பாக்சிங் பயிற்சி நடத்தப்படுகிறது.இந்தாண்டிற்கான இலவச பயிற்சி, ஜூலை 1ம் தேதி முதல் துவங்குகிறது.இந்த பயிற்சி, அமைந்தகரையை அடுத்த ஷெனாய் நகர் பூங்காவில் நடக்கிறது. தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும், மாலை 7:00 முதல் 8:00 மணி வரையும் நடக்கும்.இதுகுறித்து, கிளப் செயலர் மற்றும் ஆசான் ஏழுமலை கூறுகையில்,''இலவச பாக்சிங் பயிற்சியானது, ஒரு மாதம் மட்டும் கிடையாது. ஆண்டு முழுதும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில், 8 வயதிற்கும் மேற்பட்டோர் அனைவரும் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 90940 32387, 88388 11467 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago