உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இலவச வீட்டுமனை பட்டா சப் - கலெக்டர் சோதனை

இலவச வீட்டுமனை பட்டா சப் - கலெக்டர் சோதனை

மாமல்லபுரம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், கிராம நத்தம் புறம்போக்கு இடத்தில், ஏராளமானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இவர்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, ஜமாபந்தி, மக்களுடன் முதல்வர் முகாம் ஆகியவற்றில் மனு அளித்தனர். இதையடுத்து, தாசில்தார் ராதா, பட்டா வழங்க வேண்டிய பயனாளிகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைத்தார்.வீட்டுமனையின் மதிப்பு, 1 லட்சம் ரூபாய்க் கும் மேல் எனில், பட்டா வழங்க, சப் - கலெக்டர் ஆணை வழங்க வேண்டும்.அதன்படி, சப் - கலெக்டர் நாராயண சர்மா, அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்கிறார். நேற்று முன்தினம், கல்பாக்கம் அடுத்த நல்லுார், லட்டூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.மேலும், பரிந்துரைக்கப்பட்டவரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தார். நிலம் மற்றும் வேறு வீட்டுமனை பட்டா உள்ளதா ஆகிய விபரங்களை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ