உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சி அலுவலக வளாகத்தில், ஊராட்சி நிர்வாம் மற்றும் 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நேற்று நடத்தினர்.இதில், பொதுநல சிறப்பு மருத்துவர் சந்திரசேகர சண்டில்யா, ஓய்வு பெற்ற எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் ராதாபாய், பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, குழந்தை சார்ந்த மருத்துவங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி