உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா கடத்திய ரவுடி கைது

கஞ்சா கடத்திய ரவுடி கைது

ஸ்ரீபெரும்புதுார் : சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு சந்திப்பில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, எச்சூரைச் சேர்ந்த ரவுடி சுரேஷ், 33, ஓட்டி வந்த 'ஆர்15' பைக்கை நிறுத்தி, சோதனையிட முயன்றனர்.அப்போது, வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அவர், போலீசாரை வெட்டிவிடுவதாக மிரட்டினார். சுரேஷை மடக்கி பிடித்த போலீசார், கத்தியை பறித்து, பைக்கை சோதனை செய்தனர். பைக்கில் 1 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து, சுரேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை