உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாராயணபுரம் குடியிருப்பு பகுதியில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேக்கம்

நாராயணபுரம் குடியிருப்பு பகுதியில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேக்கம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம், நாராயணபுரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் தேங்கியுள்ளது. அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் அபாயத்தில் அப்பகுதிவாசிகள் உள்ளனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 18வது வார்டு நாராயணபுரத்தில், வீடுகளுக்கு மத்தியில் உள்ள காலி மனைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.நெல்லிக்குப்பம் பிரதான சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள குப்பை மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை இரவு நேரத்தில், இங்கு கொட்டி விட்டு செல்கின்றனர்.குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள், தற்போது பெய்த மழை நீரில் நனைந்து, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவோர் மீது, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்