உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு நிலம், ஏரியில் மண் கொள்ளை: 4 பேர் கைது

அரசு நிலம், ஏரியில் மண் கொள்ளை: 4 பேர் கைது

குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்கால் புறம்போக்கு நிலம், ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் ஆகிய இடங்களில், இரவு நேரத்தில் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது.இதுகுறித்து, சோமங்கலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு, தகவல் கிடைத்தது. உடனே, காட்டரம்பாக்கம் சென்ற போலீசார், மண் கொள்ளையில் ஈடுபட்டோரை பிடித்தனர்.ஏரியில் மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் இயந்திரம், மூன்று டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். மண் கொள்ளையில் ஈடுபட்ட ராஜ்குமார், 26, அரவிந்த், 26, முரளி, 30, விநாயகம், 65, ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை