உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி சாலை ஆக்கிரமிப்பு ஷோரூம் வாகனங்களால் நெரிசல்

கூடுவாஞ்சேரி சாலை ஆக்கிரமிப்பு ஷோரூம் வாகனங்களால் நெரிசல்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து, அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அதன் அருகில் குப்பை தேக்கமடைந்துஉள்ளன.இதனால், சாலை அருகில் உள்ள மீனாட்சி நகர், சீனிவாசபுரம், ராதாகிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர், சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாமல், பிரதான சாலைக்கு நடக்கும் நிலை ஏற்படுகிறது.அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மீது மோதி, சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன.காலை வேளையில், பள்ளி செல்லும் குழந்தைகளை, பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லும் போது, அப்பகுதியில் நிலை தடுமாறி விழுகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியதாவது:மீனாட்சி நகர் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் உள்ளது.இங்கு பழுது பார்க்க வரும் வாகனங்கள் மற்றும் புதிய வாகனங்களை அதிக அளவில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து, காலை முதல் இரவு வரை நிறுத்தி உள்ளனர்.இதனால், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாமல், பிரதான சாலைக்கு வருவதால், அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, சர்வீஸ் சாலையை சீரமைத்து, ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி, பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி