உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயிலில் தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

மறைமலை நகர்: சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மனைவி ரேணுகா, 42. இவர், நேற்று முன்தினம் ஹைதராபாதில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் காக்கிநாடா விரைவு ரயிலில் வந்தார்.பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி பார்த்த போது, ரேணுகா அணிந்திருந்த 1.5 சவரன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. இது குறித்து, ரேணுகா உடனடியாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.ரயில்வே கட்டுப்பாடு அறை அதிகாரிகள், செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த காக்கிநாடா விரைவு ரயிலில் சோதனை செய்த ரயில்வே போலீசார், இருக்கையின் கீழே கிடந்த செயினை கண்டுபிடித்தனர்.ரேணுகா செங்கல்பட்டு வரவழைக்கப்பட்டு செயின் ஒப்படைக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை