| ADDED : ஜூன் 26, 2024 01:00 AM
மறைமலை நகர், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான மறைமலை நகர் சிங்கார வேலன் தெரு, தீயணைப்பு நிலையம் பின்புறம் ஆகிய இடங்களில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பது தொடர்கிறது.அதேபோல், காட்டாங்கொளத்துார் திருப் பாணழ்வார் தெரு, திருத்தேரி பகத்சிங் நகர், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.காலை டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன், இங்கு அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.திருப்பாணழ்வார் தெருவில், அடுத்தடுத்த குடிசை வீடுகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாகவும், காவல் நிலையம் பின்புறமும் போலீசாருக்கு தெரிந்தே மது விற்பனை செய்யப்படுவதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மாதந்தோறும் கணக்கு காண்பிக்க மட்டும், சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.எனவே, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.