உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுகாதார மைய கட்டடம் கடுகுப்பட்டில் திறப்பு

சுகாதார மைய கட்டடம் கடுகுப்பட்டில் திறப்பு

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே கடுகுப்பட்டு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக, தனியார் கட்டடத்தில் துணை சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது.கர்ப்பிணியருக்கான பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி போன்ற நோய்களுக்கு, இங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.துணை சுகாதார மையத்தில் போதிய இடவசதி இல்லாமல், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டன.கட்டுமான பணிகள் முழுதும், கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.இந்த விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்