உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறார் மன்றம் துவக்கம்

சிறார் மன்றம் துவக்கம்

திருப்போரூர்:தாம்பரம் மாநகர் காவல், தாழம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, மேலக்கோட்டையூர் பப்ளிக் பள்ளியில் சிறார் - சிறுமியர் மன்றம் துவக்கப்பட்டது.விழாவில், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தாம்பரம் மாநகர் காவல் எல்லை இயங்கும், 15 சிறார் - சிறுமியர் மன்றங்களுக்கு இடையே, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 700 மாணவ - மாணவியருக்கு பதக்கம், விளையாட்டு உபகரணம், சான்றிதழை கமிஷனர் வழங்கினார்.மேலும், விளையாட்டுத்துறையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி