உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிற்சாலை ரசாயன துர்நாற்றம்; ஆலத்துார் பகுதிகளில் பாதிப்பு

தொழிற்சாலை ரசாயன துர்நாற்றம்; ஆலத்துார் பகுதிகளில் பாதிப்பு

திருப்போரூர் : ஆலத்துார் சிட்கோ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன புகை மற்றும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், சிட்கோ தொழிற்பேட்டை 1982ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இதில், சில நாட்களாக, சில தொழிற்சாலைகளில் இருந்து அதிக ரசாயன புகை மற்றும் துர்நாற்றம் வெளியேறுகிறது.இதனால், ஆலத்துார், தண்டலம், திருப்போரூர், பையனுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.காற்றில் இந்த புகை கலப்பதால், குழந்தைகள், முதியவர்கள் மூச்சு திணறலால் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆலத்துாரில் வீடுகள், மரங்களில் புகையின் சாம்பல் படிகிறது.தொடர்ந்து, தினமும் இந்த புகை கலந்தகாற்றை சுவாசிப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.எனவே, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன புகை துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை