| ADDED : ஜூன் 17, 2024 03:19 AM
சென்னை, : 'யு - டியூப்' சேனல் துவக்கி, லாபகரமாக நடத்துவது குறித்த பயிற்சியை தமிழக அரசு அளிக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் உள்ள தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.இந்த வகுப்பில், 'யு - டியூப்' சேனல் துவக்குவது, சமூக வலைதளங்களில் இணைப்பது, வீடியோ எடிட்டிங், இசை சேர்ப்பு, சந்தைப்படுத்துதல், ஆன்லைன் மார்க்கெட்டிங், விதிமுறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சென்னை என்ற முகவரியிலும், 044 2225 2081 மற்றும் 86681 00181, 98413 36033 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.