உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்வதேச காற்றாடி திருவிழா வெளிநாட்டு கலைஞர்கள் பரவசம்

சர்வதேச காற்றாடி திருவிழா வெளிநாட்டு கலைஞர்கள் பரவசம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், கடந்த ஆக., 15ம் தேதி, சர்வதேச காற்றாடி திருவிழா துவக்கப்பட்டது. இன்றுடன் முடிகிறது.தமிழக சுற்றுலாத்துறை, மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இவ்விழாவை நடத்துகிறது.தினசரி பிற்பகல் 2:00 மணி முதல், இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, 40 காற்றாடி கலைஞர்கள், 200க்கும் மேற்பட்ட காற்றாடிகளை பறக்க விடுகின்றனர்.தமிழகத்தின் ஜல்லிக்கட்டு காளை, குதிரை, டால்பின், சுறா, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என, பல்வேறு வடிவ காற்றாடிகள் வானில் பறந்து, மனதை கவர்கின்றன.சென்னை மற்றும் பிற பகுதி பார்வையாளர்களுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் ஏராளமானோர் கண்டு களித்து பரவசமடைந்தனர்.தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கலைஞர் பெக்கி, 30, கூறியதாவது: இந்தியா மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இந்நாட்டு மக்கள் போற்றக்கூடியவர்கள்.இதற்கு முன் நடத்தப்பட்ட இரண்டு விழாக்களிலும், காற்றாடி பறக்கவிட்ட நான், மூன்றாம் முறையாக தற்போதும் பறக்க விடுகிறேன். பரந்த கடற்கரை பரப்பில், நாங்கள் காற்றாடி பறக்க விடுவதை, மக்கள் விரும்பி ரசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.வியட்நாமைச் சேர்ந்த கலைஞர் லுயிம், 30, கூறியதாவது: இங்கு நடத்தப்படும் காற்றாடி திருவிழாவில், முதல்முறையாக நான் பங்கேற்கிறேன். கடற்கரை பகுதியில், இயல்பான காற்றில், காற்றாடியை பறக்க விடுவது பரவசமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் நடக்கும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்படுத்திஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி