உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுாரில் வீட்டுமனை பட்டா வழங்கல்

பாலுாரில் வீட்டுமனை பட்டா வழங்கல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாலுகாவில், உங்கள் ஊரில்; உங்களை தேடி திட்ட சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இந்த முகாமில், பாலுார் ஊராட்சியைச் சேர்ந்த பத்து பேர், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க, சப்- - கலெக்டருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.தொடர்ந்து, பத்து பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, சப்- - கலெக்டர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன் அடிப்படையில், கலெக்டர் அலுவலகத்தில், பத்து பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ