உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கத்தில் கீழே விழுந்த ஜார்க்கண்ட் தொழிலாளி பலி

கல்பாக்கத்தில் கீழே விழுந்த ஜார்க்கண்ட் தொழிலாளி பலி

மாமல்லபுரம்:ஜார்க்கண்ட் மாநிலம், கலபஹர் பகுதியைச் சேர்ந்தவர் சாட்டு ஷா, 43. இவர், கல்பாக்கத்தில் உள்ள எப்.ஆர்.எப்.சி.எப்., எனப்படும், வேக உலை மறுசுழற்சி எரிபொருள் ஆலை கட்டுமான பணியில், தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் நண்பகலில், இரும்பு சாரத்தில் நின்று பணி செய்தபோது, தவறி கீழே விழுந்தார். உடன் வேலை செய்த பணியாளர்கள், அவரை மீட்டு, சதுரங்கப்பட்டினம், ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.பணியின் போது, சாட்டு ஷா ஹெல்மெட் அணிந்திருந்தும், எதிர்பாராத விதமாக அவர் பலியாகியுள்ளார். ஜார்க்கண்ட்டில் உள்ள அவரின் குடும்பத்தினர் வந்த பிறகே, புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என,போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

13 hour(s) ago  




சமீபத்திய செய்தி