உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காஞ்சிபுரம் மாவட்ட வழக்குகள் செங்கை நீதிமன்றத்தில் தேக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட வழக்குகள் செங்கை நீதிமன்றத்தில் தேக்கம்

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம், 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் தேதி பிரிக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட பிற அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒருங்கிணைந்த நீதித்துறை மாவட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம் இயங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் - இரண்டு உள்ளிட்ட நீதிமன்றங்கள் அனைத்தும், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்ற கட்டுப்பாட்டு நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வந்தன.மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, தனி நீதித்துறை மாவட்டம் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் அமைக்க, தமிழக அரசு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.அதன்படி, காஞ்சிபுரத்தில், முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை, கடந்த மார்ச் 3ம் தேதி திறக்கப்பட்டன.அதன்பின், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட நிலுவை வழக்குகளை காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அனுப்ப, செங்கல்பட்டு நீதிமன்றம் முடிவு செய்தது.தொடர்ந்து, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு, சிவில் வழக்குகள், மகிளா நீதிமன்ற வழக்குகள், போக்சோ மற்றும் குடும்பநல வழக்குகள், எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகள் என, 443 வழக்குகள், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, மார்ச் மாதம் காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஆனால், உயர் நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் வழக்குகளை ஏற்றுக்கொள்ள முடியது என, காஞ்சிபுரம் நீதிமன்றத்திலிருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு, அனைத்து வழக்குகளையும் திருப்பி அனுப்பியதாக, வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவித்தனர்.இந்த வழக்குகளுக்கு, செங்கல்பட்டு நீதிமன்றங்களில் வாய்தா போடப்படுவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வாழக்காடிகள் வந்து செல்கின்றனர்.இதனால், வழக்குகள் தேக்கம் ஏற்படுவதால், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாழக்காடிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ