உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி, ஆலிகுப்பத்தில், மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் மூதாதையர்கள், குலதெய்வமான பெரியாண்டவரை, கல் நட்டு வழிபட்டு வந்தனர். சுவாமிக்கு கோவில் இல்லாத நிலையில், நீண்ட துாரத்தில் திருக்கழுக்குன்றம் அடுத்த திருநிலையில் அமைந்துள்ள பெரியாண்டவர் கோவிலுக்குச் சென்று, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.தங்கள் வசிப்பிடத்தில், பெரியாண்டவருக்கு கோவில் கட்ட முடிவெடுத்து பெரியாண்டவர், விநாயகர், அங்காளம்மன் ஆகிய சுவாமியருடன், முதல் முறையாக தற்போது கோவில் கட்டியுள்ளனர்.இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை