குன்னப்பட்டு - அருங்குன்றம் சாலை படுமோசம்
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய குன்னப்பட்டு ஊராட்சியில் ஹிட்டாச்சி, அஜினமோட்டோ உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து ஆனந்தபு ரம்வழியாக அருங்குன்றம்செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியமாக மாறி, மோசமான நிலையில் உள்ளது.இச்சாலையின் அகலம் குறைவாக உள்ளதால், இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, சாலையைக் கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் பணிக்கு செல்லவும், பல்வேறு தேவைகளுக்கும் இச்சாலையில்பயணிக்கின்றனர்.மேற் கண்ட பிரச்னைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையைமேம்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.