உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.23 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு ஆய்வக கட்டடம்

ரூ.23 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு ஆய்வக கட்டடம்

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த கோவளம் பிரதான கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், கோவளம், முட்டுக்காடு, கானத்துார், திருவிடந்தை, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, இயற்பியல் ஆய்வக கட்டட வசதி இல்லாததால், தேர்வு நேரத்தில், அருகே உள்ள தனியார் பள்ளிக்கு செல்கின்றனர்.மாணவர்களின் நலன் கருதி, கோவளம் தனியார் அறக்கட்டளை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், இயற்பியல் ஆய்வகம், ஒரு வகுப்பறை கட்டடம், 2,666 சதுர அடியில் கட்ட முடிவு செய்யப்பட்டது.தற்போது, ஏற்கனவே உள்ள கட்டடத்தின் முதலாவது தளத்தில், இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது, 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை