உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓ.எம்.ஆர்., சந்திப்பில் வழக்கறிஞர்கள் மறியல்

ஓ.எம்.ஆர்., சந்திப்பில் வழக்கறிஞர்கள் மறியல்

செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார் நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு, 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர்.இவர்களில், 55 பேர் நேற்று, நீதிமன்றத்தை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், ஓ.எம்.ஆர்., 'ஆவின்' சந்திப்பில், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.காவல் உதவி ஆணையர் ரியாசுதீன் நடத்திய பேச்சுக்குப் பின், அனைவரும் கலைந்து சென்றனர்.வழக்கறிஞர்கள் கூறியதாவது:மாமல்லபுரம் இன்ஸ்., ருக்மாங்கதன், வழக்கறிஞர் கார்த்திகேயன் மீது பொய்வழக்கு பதிவு செய்தார். செம்மஞ்சேரி இன்ஸ்., மகுடீஸ்வரி, நீதிமன்றத்தில் வைத்து வழக்கறிஞர்களை ஒருமையில் பேசினார்; அருண்குமார் என்ற வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்வதாகக் கூறி மிரட்டுகிறார்.இருவர் இன்ஸ்., மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் பொய் வழக்கு போடுவதைத் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ