உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இச்சைக்கு மறுத்த அத்தை கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை

இச்சைக்கு மறுத்த அத்தை கொலை உறவினருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு : சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐ.டி., நிறுவன ஊழியர். அவரது மனைவிகிருஷ்ணவேணி, 35.இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கணவரின் உறவினர், சென்னை எழும்பூரைச் சேர்ந்த அருண்குமார், 32. ஐ.டி., நிறுவன ஊழியர்.கடந்த 2016, ஜூன் 14ம் தேதி, அத்தை முறை உறவினரான கிருஷ்ணவேணி, வீட்டில் தனியாக இருந்தபோது, பாலியல் இச்சைக்கு இணங்குமாறு, அருண்குமார் வற்புறுத்தியுள்ளார். கிருஷ்ணவேணி மறுக்கவே, அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.இந்த வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வக்கீல் சசிரேகா வாதிட்டார்.நேற்று நடந்த விசாரணையில், அருண்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து, நீதிபதி தமிழரசி, அவருக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ