உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அ.தி.மு.க., பெண் நிர்வாகியை பிளேடால் கிழித்தவர் கைது

அ.தி.மு.க., பெண் நிர்வாகியை பிளேடால் கிழித்தவர் கைது

வில்லிவாக்கம்:வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரில் உள்ள சுடுகாட்டிற்கு முதல் தெரு வழியாக, நேற்று முன்தினம் மாலை சவ ஊர்வலம் சென்றது. குடியிருப்பு வழியாக சென்ற ஊர்வலத்தில், சிலர் போதையில் பூ மாலைகளை பொதுமக்கள் மீது வீசியப்படி அட்டூழியம் செய்தனர். அப்போது, அதேபகுதியில் வசிக்கும் அ.தி.மு.க., பகுதிய துணை செயலர் ஆதிலட்சுமி, 61, என்பவர் மீது மாலை வீசப்பட்டதாக தெரிகிறது. ஆதிலட்சுமி இதை தட்டிக்கேட்ட போது, கூட்டத்தில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் ஒருவர் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த 'பிளேடால்' ஆதிலட்சுமியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் கிழித்து தப்பினார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.வில்லிவாக்கம் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சரவணன், 31, என்பது தெரிந்தது. வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த சரவணனை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை