உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்றவர் கைது

வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்றவர் கைது

செங்கல்பட்டு,செங்கல்பட்டு அடுத்த திருமணியில், போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா போதையில் இருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், செங்கல்பட்டு அழகேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவது போலீசார் தெரியவந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீசார், 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, மதுராந்தகம் அடுத்த சரவம்பாக்கத்தைச் சேர்ந்த அருள்குமார், 28, என்பதும், இங்கு வீடு வாடகைக்கு எடுத்து செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அருண்குமாரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி