உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையின் இரு புறங்களிலும், மழைநீர் வடிகால்வாய் மற்றும் சாலையை ஆக்கிரமித்து, கடைகளுக்கான படிக்கட்டுகள், விளம்பர போர்டு கள் வைக்கப்பட்டு உள்ளன. அதனால், அப்பகுதியில் உள்ள பள்ளிகளின் மாணவ - மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதுகுறித்து, அப் பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இந்த சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில், 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சென்று வருகின்றனர்.கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து, நெல்லிக்குப்பம் சாலை மலைமேடு வரை, இருபுறங்களிலும் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து, கடைகள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், பள்ளி வளாகத்தின் அருகிலேயே இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர்போக்குவரத்து இடையூறால் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்த புகாரின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பின், சில மாதங்களுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி நடந்தது.அப்போது, வணிகர் சங்கங்கள் கால அவகாசம் கேட்டதை அடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது, பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ் நாட்டு அறிவாளி
மார் 30, 2024 14:19

இந்த ரோடு ஏற்கனவே மிக குறுகலாக இருக்கிறது இந்த ரோட்டில், ஸ்ரீராம் சங்கரி மற்றும் ஸ்ஐஸ் போன்ற கம்யூனிட்டி அபார்ட்மெண்ட் உள்ளது இதில் ஓவென்றிலும் குடும்பங்கள் வசிக்கிறது இங்கு உள்ள பள்ளிகள் ரோட்டில் உள்ளதால் பள்ளி காவலர்கள் ட்ராபிக் போலிஸ் வேலை செய்கிறார்கள் இப் பள்ளிகள் ட்ராபிக் கன்ட்ரோல் செய்யும் விதம் கண்டிக்கத்தக்கது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை