உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புது அங்கன்வாடி மையம் கட்டுமான பணி தீவிரம்

புது அங்கன்வாடி மையம் கட்டுமான பணி தீவிரம்

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கீழ்கோட்டையூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு, கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 30க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். ஏற்கனவே இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், தற்போது முன்னெச்சரிக்கையாக நுாலக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. பழைய கட்டடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, அதே இடத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டுமான பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை