உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிணார் ஊராட்சியில் புதிய மேல்நிலை தொட்டி

கிணார் ஊராட்சியில் புதிய மேல்நிலை தொட்டி

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஒன்றியம், கிணார் ஊராட்சியில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில், அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, கிணார் - ஏர்பாக்கம் சாலை, கீழாண்ட தெருவில் வசிக்கும் மக்களுக்காக, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.அதன்படி, பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், 2022- - 23ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகட்டும் பணி நடந்து வருகிறது.தற்போது, 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்