உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்பாட்டிற்கு வராத புதிய மேல்நிலை தொட்டி

பயன்பாட்டிற்கு வராத புதிய மேல்நிலை தொட்டி

சித்தாமூர் : சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வில்லிப் பாக்கம் கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராம மக்களுக்கு குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாககுடிநீர் வினியோகம்செய்யப்படுகிறது.இருப்பினும், பொதுமக்கள் போதைய தண்ணீர்இல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக அவதிப் பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஜே.ஜே.எம்., திட்டத்தில், 17.5 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில், 30,000லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டிற்கு வரும் முன், சூணாம்பேடு பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி, தனக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், மேல்நிலை தேக்கத் தொட்டி தற்போது வரை செயல்படாமல் உள்ளதாககூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலை தேக்கத்தொட்டியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, சித்தாமூர் வட்டார வளர்ச்சிஅலுவலக உதவிப்பொறியாளர் கூறியதாவது:நாளை மறுநாள், வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. மேல் நிலை தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ள இடம், அரசு புறம்போக்கு வகைப் பாட்டில்உள்ளது.அதற்கான ஆவணங்களை வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மேல்நிலை தேக்கத் தொட்டியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை