மேலும் செய்திகள்
மாமல்லை நகராட்சி வார்டுகள் 15ல் இருந்து 22 ஆக உயர்வு
3 minutes ago
நாளைய மின் தடை
5 minutes ago
இன்று இனிதாக
6 minutes ago
வாக்காளர் சிறப்பு முகாமில் 16,176 மனுக்கள் ஏற்பு
7 minutes ago
சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டன. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டன.இந்நிலையில், ஒற்றைச் சாளர முறைக்கான இணையதளம் உருவாக்கப்பட்டு, கட்டுமான திட்ட அனுமதி பணிகள் அதற்கு மாற்றப்பட்டன. இதன் பின், மனைப்பிரிவு திட்ட அனுமதி பணிகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டன.இருப்பினும், நில வகைப்பாடு மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் பெறுதல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள், ஒற்றைச் சாளர முறை இணையதளத்திற்கு மாறாமல் இருந்தன.இப்புதிய இணையதளத்தில் நில வகைப்பாடு மாற்ற பணிகள், சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டதில், வெற்றி கிடைத்துள்ளது.இதையடுத்து, நில வகைப்பாடு மாற்ற பணிகள், ஒற்றைச் சாளர முறை இணையதளத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன.இவ்வசதியை பயன்படுத்த பொதுமக்கள், கட்டுமான துறையினர், https://onlineppacmda.tn.gov.inஎன்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
3 minutes ago
5 minutes ago
6 minutes ago
7 minutes ago