மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
3 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
3 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
3 hour(s) ago
புதுப்பட்டினம்: கல்பாக்கம், புதுப்பட்டினத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் நகர், இந்திரா நகர், சீனிவாசன் நகர், ராஜா நகர், பிரபலிமேடு ஆகிய பகுதியினர், ஊராட்சி பிற பகுதியில், 1.5 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வந்தனர்.ஆனால், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வரும் மக்கள், எப்போது கடை திறக்கப்படுகிறது என தெரியாமல், பொருட்கள் வாங்க இயலாமல் பாதிக்கப்பட்டனர்.இப்பகுதிகளின் 500 அட்டைதாரர்களுக்காக, புதிய ரேஷன் கடை துவக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஊராட்சி அலுவலக வளாகத்தில், அதற்கான கட்டட வசதியை, ஊராட்சித் தலைவர் காயத்ரி ஏற்படுத்தியும், வட்ட வழங்கல் நிர்வாகம் தொடர்ந்து தாமதப்படுத்தியது.பொதுமக்கள் போராட முடிவெடுத்த நிலையில், நேற்று பகுதி நேர ரேஷன் கடை துவக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர் காயத்ரி, நுகர்வோருக்கு பொருட்கள் வழங்கி, ரேஷன் கடையை துவக்கி வைத்தார்.வட்ட வழங்கல் அலுவலர் முருகன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கடை சனிக்கிழமைதோறும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago