உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சீக்கனாங்குப்பம் ஊராட்சியில் மேல்நிலை தொட்டி அமைப்பு

சீக்கனாங்குப்பம் ஊராட்சியில் மேல்நிலை தொட்டி அமைப்பு

செய்யூர்:செய்யூர் அருகே சீக்கனாங்குப்பம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், அங்கன்வாடி மையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது.பராமரிப்பு இல்லாமல் மேல்நிலை தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதை அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டு, மின் மோட்டாருடன் நேரடியாக குழாய்கள் இணைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பழைய குடிநீர் தொட்டி இருந்த இடத்தில், 17.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணிகள் முடிந்து, விரைவில் மேல்நிலை தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்