உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழுநோய் பாதித்த முதியோர்கள் வரைந்த ஓவியங்கள் விற்பனை

தொழுநோய் பாதித்த முதியோர்கள் வரைந்த ஓவியங்கள் விற்பனை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி, நேற்று நடந்தது.இந்த கண்காட்சியில், கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, அவர்கள் வரைந்த ஓவியத்தை வாங்கி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.அதன்பின், முதன்மை கல்வித்துறை சார்பில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் வரைந்த 50 ஓவியங்களை வாங்கி, அவர்களை ஊக்குவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ