உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி

மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கிய மழை, இரவு 8:00 மணி வரை, பல்வேறு பகுதிகளில் விடாது பெய்தது.அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண்: எம்500 மாநகர பேருந்தின் ஜன்னல் பக்கத்தின் மேற்பகுதியில், மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால், பயணியர் நனைந்தபடியே தாம்பரம் வரை பயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி