உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூந்தண்டலத்தில் டவர் அமைக்க தடை செய்ய கோரி தாசில்தாரிடம் மனு

பூந்தண்டலத்தில் டவர் அமைக்க தடை செய்ய கோரி தாசில்தாரிடம் மனு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய பூந்தண்டலம் கிராமத்தில், மொபைல் போன் டவர் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என, அப்பகுதி வாசிகள் திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பூந்தண்டலம் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனிநபர் இடத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடக்கிறது. மொபைல் போன் டவர் அமைக்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமைக்கும் இடத்திலிருந்து, 500 மீட்டர் துாரத்தில் அமைக்கலாம். இதுகுறித்து தண்டலம் கிராம நிர்வாக அலுவலர், திருப்போரூர் வருவாய் ஆய்வாளர், ஊராட்சி தலைவரிடம் கூறி பணி நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் பணி தொடரப்பட்டது.தற்போது, டவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் நிரந்தரமாக பணி தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை