உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊரப்பாக்கத்தில் வடிகால்வாயை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

ஊரப்பாக்கத்தில் வடிகால்வாயை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

கூடுவாஞ்சேரி, : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.அதில் அவர்கள்கூறியிருப்பதாவது:நந்திவரம் பெரிய ஏரி மற்றும் ஊரப்பாக்கம்சித்தேரி ஆகியவற்றின் உபரி நீர், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், ஐந்து கண் பாலம் வழியாக, மண்ணிவாக்கம் ஏரி சென்று அடையாற்றில் கலக்கிறது.தற்போது, வைகை நகர் செல்லும் மழைநீர் வடிகால்வாயில், ஆகாய தாமரைகள் நிறைந்துள்ளன.மேலும், அதில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி, துார் வாரி, மழைநீர்தேங்காமல் சீராக செல்லும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மழைக் காலங்களில்,இப்பகுதியில் உள்ளகுடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, கடுமையான சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மழை நீர் ஊருக்குள் வராமல் தடுக்க, வடிகால்வாயை துார் வாரி, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, மாவட்ட பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ