| ADDED : ஜூன் 26, 2024 12:57 AM
கூடுவாஞ்சேரி, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, அருள் நகர், ஆனந்தா நகர் ரயில்வே பாலம் அருகே உள்ள சாலைகள், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.மேலும், சாலையில்ஆங்காங்கே பள்ளங்கள்உள்ளதால், சிறு மழைபெய்தாலும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி, இருசக்கரவாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து, விபத்துகளில் சிக்குகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கூடுவாஞ்சேரி அருள் நகர், ஆனந்தா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்கின்றனர்.இந்த சாலைகளை சீரமைத்து, பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, மேடு, பள்ளங்களாகவும்,குண்டும் குழியுமாகவும் காணப்படுகின்றன. எனவே, சேதமாகியுள்ள சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.