| ADDED : ஜூலை 26, 2024 11:29 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டதில், பள்ளி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சிறகை விரிக்கலாம் வாருங்கள் -- 100 என்ற தலைப்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான கவிதை போட்டி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.இப்போட்டியில், 66 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், வெற்றிபெற்ற பத்து மாணவ - மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு, மருத்துவ கல்லுாரி கட்டணமாக, சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கலெக்டர் 50,000 ரூபாயும், தனியார் தொண்டு நிறுவனத்தினர் 55,000 ரூபாயும் வழங்கப்பட்டது.