உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேச்சுபோட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுபோட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை சார்பில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சிறகை விரிக்கலாம் வாருங்கள் - 100 என்ற தலைப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுபோட்டி நேற்று நடந்தது.மாவட்டம் முழுதும் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசு மற்றும் ரொக்க பரிசுகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை