உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நுாறுநாள் வேலை வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நுாறுநாள் வேலை வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

செய்யூர், மதுராந்தகம் ஒன்றியத்தில், 58 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுவது போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது.ஓணம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, இந்த திட்டத்தின் மூலமாக வேலை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது வழங்கப்பட்டுள்ள வேலை அடுத்த வாரத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்த வாரம் 80 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்துள்ளது.இதனால், அனைவருக்கும் வேலைவழங்க வேண்டும் என, செய்யூர்-போளூர் மாநில நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை